வடமராட்சி கிழக்கில் காணாமல் போன மீனவரின் சடலம் கரையொதுங்கியது!

Date:

மருதங்கேணி கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் தெப்பம் மீது இனந்தெரியாத படகு மோதியதில் காணாமல் போன மீனவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மாலை கரையொதுங்கியுள்ளது.

மருதங்கேணியைச் சேர்ந்த முத்துச்சாமி தவராசா (வயது- 61) என்பவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை (16) அதிகாலை 4.00 மணியளவில் தெப்பத்தில் சென்று மீன்பிடியில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது இனந்தெரியாத படகு ஒன்று தெப்பத்தை மோதியதாக தெரிவிக்கப்பட்டது. இதில் தெப்பம் கரையொதுங்கி உள்ள நிலையில் மீனவர் காணாமல் போயிருந்தார்.

காணாமல் போன மீனவரை தேடும் பணியில் அப்பகுதி மக்களும் கடற்படை சுழியோடிகளும் ஈடுபட்டிருந்தனர்.

இந் நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ( 17) மாலை சடலம் மருதங்கேணி கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.

சடலத்தை கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் ஜெமில் பார்வையிட்டார். சடலத்தின் முகத்தில் காயங்கள் காணப்படுவதால் தடயவியல் பொலிசாரை அழைத்து தடயங்கள் பெறப்பட்ட பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்

இது தொடர்பில் மருதங்கேணிப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம்...

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்