யாழ் மத்திய கல்லூரி அதிபர் இழுபறி: இன்றும் ஒளித்து பிடித்து விளையாட்டு!

Date:

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பதில் அதிபர் தொடர்பு எல்லைக்கு அப்பாலுள்ளதாக மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய அதிபர் இன்று பதவியேற்கவிருந்த நிலையில், அவரிடம் பொறுப்பை கையளிக்காமல் தவிர்ப்பதற்காக பதில் அதிபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுள்ளதாக கருதப்படுகிறது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் விவகாரம் அண்மையில் சூடு பிடித்திருந்தது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் தலையீடுகளையடுத்து கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தில் ஆரம்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு, தற்போது அதிபர் விவகாரத்திலும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக பழைய மாணவர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாடசாலையின் அதிபர் பதவி வெற்றிடமாக உள்ள நிலையில், பதில் அதிபராக கடமையாற்றிய இந்திரகுமாரை, அதிபராக நியமிப்பேன் என, ஈ.பி.டி.பி ஆதரவு பழைய மாணவர் சங்கத்திடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

எனினும், புதிய அதிபருக்காக அண்மையில் நடந்த நேர்முக தேர்வில் பாடசாலையின் பிரதி அதிபர் அதிக புள்ளிகளை பெற்று, அதிபராக தகுதி பெற்றார். அவர் பாடசாலை அதிபராக நியமிக்கப்படுவதாக கல்வியமைச்சினால் கடிதம் அனுப்பப்பட்டது.

எனினும், ஈ.பி.டி.பி ஆதரவு பெற்ற பதில் அதிபர் பொறுப்பை கையளிக்காமல் தவிர்த்து வந்தார்.

இந்த பின்னணியில் பழைய மாணவர் சங்கத்தின் ஒரு பிரிவு உள்ளிட்ட தரப்புக்களின் பின்னணியில் மத்திய கல்லூரியின் முன்பாக அண்மையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அவசர கதியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் என்ன கோசத்தை முன்வைப்பது என தெரியாமல், ஆண் பாடசாலைக்கு பெண் அதிபர் வேண்டாம் என போராடி மூக்குடைபட்டனர்.

இந்த நிலையில், இன்று மதியம் அதிபர் பதவியை கையளிப்பதாகவும், அதை கண்காணிக்க வலயக்கல்வி பணிமனையிலிருந்து 2 உத்தியோகத்தர்களை வருமாறும் பதில் அதிபர் கூறியிருந்தார்.

கடமைகளை கையளிப்பதாக குறிப்பிட்ட தருணத்தில், பாடசாலை மாணவர்களை வீதிக்கு இறக்கி போராட்டம் ஒன்றை முன்னெடுத்து, புதிய அதிபர் கடமையேற்பதை தடுக்க ஈ.பி.டி.பி ஆதரவு பழைய மாணவர் சங்கத்தின் தூண்டுதலில் சில ஆசிரியர்களின் பங்களிப்புடன் திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருந்தது.

எனினும், புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர் இன்று காலையே இந்த விவகாரத்தை பொலிசாருக்கு அறிவித்து, பாடசாலையில் மாணவர்களை வற்புறுத்தி போராட்டத்தில் ஈடுபடுத்தும் திட்டம் உள்ளதாகவும், இதனால் பாடசாலை மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுமென்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, இன்று காலை முதல் பொலிஸ் அணியொன்று பாடசாலை சூழலில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளது. இதனால் போராட்டம் பிசுபிசுத்தது.

இந்த பின்னணியில், இன்று குறிப்பிட்ட சமயத்தில் பொறுப்புக்களை கையளிக்க பதில் அதிபர் செல்லவில்லை. உயரதிகாரிகள் அழைப்பேற்படுத்திய போதும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்த சூழலில், புதிதாக அதிபராக நியமிக்கப்பட்ட சுகந்தினி செல்வகுணாளன், விதிகளின் படி தானே புதிய அதிபர் என்பதால், அதிபர் அலுவலகத்தை பூட்டுமாறும், தனது அனுமதியில்லாமல் அதற்குள் நுழைய யாரையும் அனுமதிக்க வேண்டாமென அறிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் சீன சைபர் மோசடிக் கும்பல்களை விசாரிக்க அமெரிக்க FBI குழு வருகை!

இலங்கையில் தங்கியிருந்து சீனப் பிரஜைகளால் நடத்தப்படும் சைபர் மோசடி மையங்கள் தொடர்பான...

கொழும்பில் அபாயகரமான நிலையை எட்டிய காற்று மாசுபாடு! AQI 178 ஆக உயர்வு

கொழும்பில் நேற்று (நவம்பர் 17) காலை காற்று மாசுபாட்டின் அளவு ஆரோக்கியத்திற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்