யாழ்ப்பாணம், வேம்படி மகளிர் கல்லூரியில் மயங்கி விழுந்த ஆசிரியர், யாழ்ப்பாணம் பேதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
இருதய பாதிப்பினாலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஆசிரியரான கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் (32) எனும் ஆசிரியரே உயிரிழந்துள்ளார்.
கடந்த வாரம் பாடசாலையில் பிரார்த்தனையின் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து சிகிச்சைக்காக யாழ்.போதான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்ததில், ஆசிரியர் இதுவரை கண்டறியாத இருதய சிக்கல் இருப்பது தெரிய வந்தது. அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த போதும், சிகிச்சை பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்




