கிளிநொச்சி நகரில் பயங்கர விபத்து!

Date:

கிளிநொச்சி நகரில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி காயமடைந்த
நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி
வைத்தியசாலைக்கு அண்மையில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியின் பின்பகுதியில் மோதியே குறித்த
விபத்து இடம்பெற்றுள்ளது.

நெல் ஏற்றி சென்ற பார ஊர்தியின் சாரதி துயில்வதற்காக வீதியின் ஓரத்தில்
வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார்.

யாழிலிருந்து தெற்கு நோக்கி பயணித்த மற்றுமொரு பார ஊர்தி நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மோதியுள்ளது.

குறிதத் விபத்தில் மோதிய பார ஊர்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,
சாரதி சாதாரண காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

வாகனேரியில் யானை தாக்கி விவசாயி பலி

மட்டக்களப்பு வாகனேரி பிரதேசத்தில் காட்டு யானை தாக்குதலில் 60 வயதுடைய விவசாயி...

யாழ் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவரின் மரணத்திற்கான காரணம்!

இளவாலை பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கிருமித் தொற்று காரணமாக...

இந்தியாவின் நிரந்தர பாலம் 13 அமைக்கும் திட்டத்தின் மாத்தளையில் முதலாவது பாலத்துக்கான அடிக்கல் நாட்டி வைப்பு

இந்திய அரசின் மானிய உதவியின் கீழ்  இலங்கையில் புனர்நிர்மானிக்கப்படவுள்ள 13 நிரந்தர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்