டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமனில் முடித்த இந்திய அணி 117 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
அதேவேளையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி 2வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது.
அந்த அணி 118 புள்ளிகள் பெற்றுள்ளது. இங்கிலாந்து (115), தென்னாபிரிக்கா (106), நியூஸிலாந்து (95), பாகிஸ்தான் (92), இலங்கை (79), மேற்கு இந்தியத் தீவுகள் (77), வங்கதேசம் (51), சிம்பாப்வே (32) ஆகிய அணிகள் முறையே 3 முதல் 10 இடங்களில் உள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1