பிரித்தானியாவின் உருத்திரிபடைந்த வைரஸே இலங்கையில் பரவுகிறது!

Date:

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட உருத்திரிபடைந்த B.1.1.7 கொரோனா வைரஸே இலங்கையில் பரவுவதாக சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் நிறுவனத்தின் இயக்குநர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபை பகுதி, பொரலஸ்கமுவ மற்றும் குருநாகல் பகுதிகளில் கொரோனா தொற்றிற்குள்ளானவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட 43 மாதிரிகளில் நடத்தப்பட்ட மரபணு வரிசைமுறை சோதனை மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

உருத்திரிபடைந்த இந்த புதிய வகை கோவிட் இனத்தால் பாதிக்கப்பட்ட முதல் நபர் ஏப்ரல் 08 ஆம் திகதி பொரலஸ்கமுவவில் உள்ள ஒரு வேலைத் தளத்தில் அடையாளம் காணப்பட்டார் என்று அவர் மேலும் கூறினார்.

நாட்டில் வேகமாக பரவி வரும் கோவிட் நிலைக்கு இந்த புதிய வகையே முக்கிய காரணம் என்றும், தற்போது நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பாதிக்கப்பட்ட கோவிட் மாதிரிகள் குறித்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் முடிவுகள் அடுத்த ஞாயிற்றுக்கிழமை கிடைக்கும் என்றும் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்தார்.

B.1.1.7 முதன்முதலில் இங்கிலாந்தில் கென்ட் மாநிலத்தில் அடையாளம் காணப்பட்டது. இந்த திரிபு சராசரி SARS கோவிட் வைரஸை விட 55 சதவீதம் வேகமாக பரவும் அபாயமானது.

இந்த வைரஸால் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாணத்தில் கிணற்றைச் சுத்தம் செய்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணத்தில் கிணறு துப்புரவு செய்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிப்பு! யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கிணறு...

தபால்காரரின் படுக்கையின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2000 இற்கும் அதிக கடிதங்கள்

ஹல்தும்முல்லையில், தபால்காரர் ஒருவர் தனது படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த, விநியோகிக்கப்படாத...

கிழக்கின் பாதுகாப்பும் தேசிய ஒற்றுமையும் முஸ்லிம்களின் வரலாற்றுப் பொறுப்பு! – அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

முஸ்லிம் சமூகத்தில் பிரதேச மற்றும் உள்ளூராட்சி மட்டங்களில் காணப்படும் நிர்வாக வேறுபாடுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்