அந்தகன் பட த்தில் நடித்து வரும் நடிகர் கார்த்திக் கொரோனா வைரஸ் 2ஆவது தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை என்ற பட த்தின் மூலமாக சினிமாவில் கால் பாதித்தார்.
நேரம் வந்தாச்சு, தாய் மூகாம்பிகை, பக்கத்து வீட்டு ரோஜா, ஆகாய கங்கை, நினைவுகள், மௌன ராகம், அக்னி நட்சத்திரம், என் ஜீவன் பாடுது, மாஞ்சா வேலு, ராவணன், அநேகன், மிஸ்டர் சந்திரமௌலி, தீ இவன் என்று வரிசையாக பல படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் பட த்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் பட த்தில் சிம்ரன், சமுத்திரக்கனி ஆகியோர் பலரும் நடித்து வருகின்றனர்.
இந்தப் பட த்தை பிரசாந்தின் அப்பா தியாகராஜன் இயக்கி வருகிறார். இந்த நிலையில், இந்தப் பட த்தில் நடித்து வரும் கார்த்திக் ஏற்கனவே முதல் தடுப்பூசி போட்டு இருந்த நிலையில், தற்போது 2ஆவது தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளார். சமீபத்தில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் கார்த்திக் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.