உயரழுத்த மின்மார்க்கத்தில் பட்டம் சிக்கி எரிந்ததால் வடமராட்சி, பருத்தித்துறை பிரதேசத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இன்று (27) காலை மந்திகை பகுதியில் பட்டம் ஏற்றியபோது இந்த விபரீதம் நிகழ்ந்தது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அண்மையில் உள்ள மக்கள் வங்கி கிளைக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்தது. பட்டம் ஏற்றியபோது, அது உயரழுத்த மின்மார்க்கத்தில் சிக்கி, தீப்பற்றியது. இதனால் பருத்தித்துறை பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பின்னர், மின்சாரசபை ஊழியர்களால் தற்போது பட்டத்தை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.




