விபத்தில் யுவதி பலி

Date:

அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியில் கலேவெல, மாத்தளை சந்திக்கு அருகில் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

லோச்சனா காவ்யாஞ்சலி என்ற 20 வயது யுவதியே உயிரிழந்துள்ளார்.

தம்புள்ளையில் இருந்து கலேவெல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி எதிர்திசையில் வந்த பௌசருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் தந்தை, தாய் மற்றும் இரண்டு மகள்கள் இருந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த நால்வரும் கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு ஒரு மகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த யுவதி பொலன்னறுவை சிறிபுர பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன் திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...

நீர்கொழும்பு சிறைக்கைதிகள் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர், கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள...

நீர்கொழும்பு சிறை விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்