ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார அலையடிக்கும்: புதிய கருத்துக்கணிப்பு முடிவு!

Date:

2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 51 வீதத்துடன் முன்னிலையில் இருப்பார் என சுகாதாரக் கொள்கைக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 2023 சுகாதாரக் கொள்கைக்கான நிறுவன கருத்துக் கணிப்பின்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு 30 சதவீத வாக்கும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு 13 சதவீத வாக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் பொது வேட்பாளர் முன்நிறுத்தப்பட்டால் 6 வீத ஆதரவு கிடைக்கும் எனவும் கணக்கெடுப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூலை மாதத்தின் பின் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவு வீழ்ச்சியடைய, அனுரகுமாரவின் ஆதரவு சடுதியாக அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

சுகாதாரக் கொள்கைக்கான நிறுவனம் ஒரு சுயாதீனமான ஆராய்ச்சி நிறுவனமாகும், மேலும் சுகாதாரக் கொள்கை ஆராய்ச்சிக்கான சிறந்த பிராந்திய மையமாகும், இது இலங்கையிலும் பரந்த பிராந்தியத்திலும் சுகாதார மற்றும் சமூக அமைப்புகளை மேம்படுத்துவதற்காக, சொந்தமாக, கூட்டாண்மை மற்றும் அனுசரணையாளர்களுடன் பணியாற்றுகிறது.

spot_imgspot_img

More like this
Related

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்