26.9 C
Jaffna
February 28, 2025
Pagetamil
சினிமா

நடிகை நந்திதா ஸ்வேதாவிற்கு கொரோனா பாதிப்பு..

கொரோனா அறிகுறி உள்ள நிலையில் தனக்குத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக நடிகை நந்திதா ஸ்வேதா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அட்டகத்தி படத்தின் மூலமாக சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, புலி, காத்திருப்போர் பட்டியல், கலகலப்பு 2, அசுரவதம், உள்குத்து, தேவி 2, 7, கபடதாரி, நெஞ்சம் மறப்பதில்லை என்று பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஐபிசி 376 என்ற பட த்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றால் சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், தற்போது நடிகை ந ந்திதா ஸ்வேதாவுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: எனக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘டிராகன்’ 3 நாள் வசூல் ரூ.50 கோடி – அதிகாரபூர்வ அறிவிப்பு

Pagetamil

திவ்யபாரதி உடன் டேட்டிங்கா? – ஜி.வி.பிரகாஷ் மறுப்பு

Pagetamil

“வாய்ப்பு கொடுக்காமல் ஒதுக்கினார்கள்” – பார்வதி வருத்தம்

Pagetamil

‘‘சமந்தா விவகாரத்தில் நான் குற்றவாளியாக கருதப்படுவது ஏன்?’’ – நாக சைதன்யா ஆதங்கம்

Pagetamil

கல்லூரி கதையில் சிலம்பரசன்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!