27.6 C
Jaffna
January 28, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

கிரிக்கெட் நிறுவன வழக்கிலிருந்து மற்றொரு நீதிபதியும் விலகல்

கிரிக்கெட் இடைக்கால நிர்வாக குழுவின் செயற்பாடுகளுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணையில் இருந்து மற்றுமொரு நீதிபதி விலகியுள்ளார்.

இந்த மனு இன்று (14) சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தனிப்பட்ட காரணங்களுக்காக நீதிபதி தம்மிக்க கணேபொல இந்த வழக்கில் பங்கேற்க விருப்பம் தெரிவிக்காததால், பொருத்தமான நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒன்றை நியமிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு இது தொடர்பான மனுவை அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.

முன்னதாக, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன இன்று (14) இந்த வழக்கு விசாரணையிலிருந்து விலகியிருந்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் இந்த வழக்கை விசாரிப்பதற்கு தமது கட்சிக்காரர் ஆட்சேபனை தெரிவித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சர், சில அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை நியாயமற்ற முறையில் விமர்சித்ததன் காரணமாகவே இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலக தீர்மானித்ததாக மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் அரசு கட்சிக்காக தமிழ் கட்சிகளின் சந்திப்பு மீளவும் ஒத்திவைப்பு!

Pagetamil

யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

Pagetamil

தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு 27ஆம் திகதிக்கு தள்ளிவைப்பு!

Pagetamil

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளும், வெட்டுப்புள்ளியும் வெளியீடு!

Pagetamil

அட்டகாசத்தில் ஈடுபட்ட அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

Leave a Comment