மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,000 பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு மூத்த தலிபான் தலைவர், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கூறினார்.
கடந்த இரண்டு தசாப்தங்களில் ஆப்கானிஸ்தானை தாக்கும் பயங்கரமான நிலநடுக்கமாக இதுவே கருதப்படுகிறது.
கத்தாரை தளமாகக் கொண்ட தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷஹீன், ஹெராத் மாகாணத்தில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை அடுத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பலர் காணவில்லை என்றும் கூறினார்.
பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடாரங்கள், மருத்துவம் மற்றும் உணவுப் பொருட்கள் அவசரமாக தேவைப்படுவதாகவும், உள்ளூர் வணிகர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தேவைப்படும் மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் ஷாஹீன் கூறினார்.
முன்னதாக, தகவல் மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் வாஹித் ராயன், அசோசியேட்டட் பிரஸ்ஸிடம், நிலநடுக்கம் மற்றும் வலுவான பின்அதிர்வுகளில் 2,000 க்கும் மேற்பட்டோர் இறந்ததாகக் கூறினார். சுமார் ஆறு கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன, மேலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர் என கூறினார்.
இந்த நிலநடுக்கத்தில் சுமார் 100 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தேசிய பேரிடர் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை பிற்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபை 320 பேர் இறந்ததாக முதற்கட்ட புள்ளிவிவரத்தை வழங்கியது, ஆனால் பின்னர் அந்த எண்ணிக்கை இன்னும் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், செஞ்சிலுவைச் சங்கம் 500 பேர் கொல்லப்பட்டதாகக் கூறியது.
சனிக்கிழமையன்று (06:30 GMT) ஹெராத் நகரின் வடமேற்கே 40 கிமீ (24 மைல்) தொலைவில் 6.3 ரிக்டர் அளவில் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) தெரிவித்துள்ளது. அண்டை மாநிலங்களான பட்கிஸ் மற்றும் ஃபரா மாகாணங்களில் வலுவான பின்அதிர்வுகள் உணரப்பட்டன.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 6.3, 5.9 மற்றும் 5.5 ரிக்டர் அளவுகளில் மிக வலுவான மூன்று அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், குறைந்த அதிர்ச்சிகள் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 2022 இல், கிழக்கு ஆப்கானிஸ்தானின் கரடுமுரடான, மலைப்பாங்கான பகுதியில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, கல் மற்றும் மண் செங்கல் வீடுகளை தரைமட்டமாக்கியது. இரண்டு தசாப்தங்களில் ஆப்கானிஸ்தானின் மிக மோசமாக கருதப்பட்ட அந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 1,000 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,500 பேர் காயமடைந்தனர்.




