இந்திய வீரர் ஷுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

Date:

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்பது கேள்விக்குறி ஆகியுள்ளது.

எனினும் பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஷுப்மன் கில் தற்போது சிகிச்சையில் உள்ளார். மருத்துவர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். விரைவில் குணமடைவார் என்று நம்புகிறோம். மருத்துவக் குழு அளிக்கும் அப்டேட்களை பொறுத்து அடுத்தகட்ட முடிவு இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை தொடரில் நாளை மறுநாள் சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா, அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இதற்காக சென்னை வந்ததில் இருந்தே ஷுப்மன் கில்லுக்கு காய்ச்சல் இருந்துள்ளது. காய்ச்சல் குறித்து பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதனிடையே, வெள்ளிக்கிழமை (இன்று) அவருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானது.

இதனால் அவர் ஓரிரு போட்டிகளை கில் தவறவிடலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்து நடக்கவிருக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் விளையாடுவதும் சந்தேகமே. ஏனென்றால், டெங்கு காய்ச்சலில் இருந்து குணமடைந்து மீண்டும் ஃபிட் ஆக குறைந்தது 7-10 நாட்கள் ஆகும். அதேநேரம் ரத்த அணுக்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி இருந்தால் குணமடைய இன்னும் அதிக நாட்கள் ஆகலாம்.

நடப்பாண்டில் மட்டும் ஐந்து சதங்கள் உட்பட 1200 ரன்கள் எடுத்து சிறப்பான ஃபோர்மில் இருக்கிறார் ஷுப்மன் கில். அவர் இல்லாத பட்சத்தில் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.

spot_imgspot_img

More like this
Related

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்