போதைப்பொருள் கடத்தல்காரர் நடுன் சிந்தக விக்கிரமரத்ன என்றழைக்கப்படும் ‘ஹரக் கட்டா’வை குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து தப்பியோடும் தப்பிக்க வைக்கும் நடவடிக்கையில் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் கார் சாரதி ஆகியோர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசிகளை, கடவத்தை ஹோட்டலுக்கு எதிரே உள்ள குப்பை மேட்டில் இருந்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த இரண்டு போன்களும் எரிக்கப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
‘ஹரக் கட்டா’வை தப்பிக்க வைக்க முயன்ற கான்ஸ்டபிள்,செப்ரெம்பர் 10ஆம் திகதி சிஐடி விசாரணையாளர்களுக்கு, அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் மயக்க மருந்தும், மனநோயாளிகளுக்கு போதையூட்ட பயன்படுத்தப்படும் சில மாத்திரைகளையும் தேநீரில கலந்து கொடுத்துள்ளார்.
சி.ஐ.டி.யில் இருந்து தப்பிக்க ‘ஹரக் கட்டா’வுக்கு உதவிய நடவடிக்கை தோல்வியடைந்ததால், பொலிஸ் கான்ஸ்டபிள் தப்பி ஓடிவிட்டார். அவர் காணாமல் போய் இன்றுடன் 20 நாட்கள் ஆகிறது.
செப்டெம்பர் 10ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்த ஹரக் கட்டாவை ஏற்றிச் செல்வதற்கு தயார்படுத்தப்பட்டிருந்த வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளரை வெலிகம கடற்கரை வீதியில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.
காரின் சாரதியான வெலிகம இப்பாவல பிரதேசத்தைச் சேர்ந்த தினேஸ் தரங்க என்ற சந்தேக நபரும் மற்றைய சந்தேக நபரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தற்காலிக விதிகளின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 10 அன்று கான்ஸ்டபிள் சிஐடியிலிருந்து வெளியேறியதிலிருந்து, அவர் காரில் கடவத்தைக்குச் செல்லும் நேரம் வரை, அவர் மிதிகம ருவானுடன் தொடர்பில் இருந்த தொலைபேசி மற்றும் மிதிகம ருவானுடன் இணைக்கப்பட்ட சாரதி பயன்படுத்திய தொலைபேசி ஆகியவை கடவத்தை அதிவேக நெடுஞ்சாலைக்கு செல்லும் வீதியில் உள்ள ஷ்ரமதான மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் காணப்பட்டன. .
குறித்த தொலைபேசிகள் ஹோட்டல் ஒன்றிற்கு அருகாமையில் உள்ள குப்பைக் குவியலில் வீசி தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்ததையடுத்து விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று சோதனை மேற்கொண்டுள்ளது. பாதி எரிந்த நிலையில் இருந்த இரண்டு போன்களும் மீட்கப்பட்டதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கண்டுபிடிக்கப்பட்ட போது இரண்டு கையடக்கத் தொலைபேசிகளில் மிகச் சிறிய பகுதியே எரிந்துள்ளதால், அதனை விசாரணைகளுக்குப் பயன்படுத்தி பல முக்கிய தகவல்களை வெளிக்கொணர முடியும் என அவர் தெரிவித்துள்ளனர்.