கடுவெல நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தின் உள்ளே இருந்து நீதவானின் முகத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சிய டியூஷன் மாஸ்டர் ஒருவரை கடுவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடுவெல நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் ஒருவர், நீதவானை நோக்கி லேசர் ஒளிக்கற்றை பாய்ச்சப்பட்டதாக கடுவெல பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.
அதன்படி, நீதவானின் உத்தரவின்படி குற்றப்பிரிவினருடன் வந்த பொறுப்பதிகாரி, அப்போது நீதிமன்றத்தில் இருந்த சுமார் 100 பேரிடம் சோதனை நடத்தினார். சோதனை காரணமாக நீதிமன்றப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அப்போது சந்தேக நபரிடம் லேசர் ஒளியை வெளியிடும் கருவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கோட்டே கொடு பம்மா வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.




