யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதைக்கு அடிமையான ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
கோயில் வீதி, நல்லூரை சேர்ந்த இராமச்சந்திரன் மயூரன் (45) என்பவரே இன்று (12) காலை உயிரிழந்தார்.
கடந்த 10ஆம் திகதி போதைப்பொருளுடன் கைதான இந்த நபர், அன்றைய தினமே நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இன்று காலையில் சுகவீனமுற்ற அவரை, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



