இலங்கையில் 3 மாதங்களில் எகிறிய எயிட்ஸ் தொற்று: 15 வயதுக்கு மேற்பட்ட 3 யுவதிகளுக்கும் தொற்று!

Date:

இலங்கையில் 2023 இன் இரண்டாவது காலாண்டில் எச்.ஐ.வி/எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.  2009 ஆம் ஆண்டின் பின்னர், ஒரு காலாண்டில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ள சந்தர்ப்பம் இதுவாகும்.

தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி, இலங்கையில் ஏப்ரல் முதல் ஜூன் வரையான இரண்டாவது காலாண்டில் 181 புதிய எச்.ஐ.வி தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. 2022 இல் 165 தொற்றுக்கள் பதிவாகிய முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது ஒன்பது சதவீத அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது.

2023 இரண்டாவது காலாண்டில் பதிவான தொற்றாளர்களில் 26 ஆண்களும், 3 பெண்களும் 15-24 வயதுக்கு உட்பட்டவர்கள். ஏனையவர்கள் 25 வயதுக்கு மேற்பட்ட நபர்கள்.

2023 இல் பதிவாகியுள்ள எச்.ஐ.வி தொற்றுகளின் ஆண் மற்றும் பெண் விகிதம் 8.1:1 ஆக உள்ளது.

அத்துடன், இரண்டாவது காலாண்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான 13 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இதேவேளை, இலங்கையில் உத்தியோகபூர்வமாக திருநங்கைகள் மத்தியில் 10 எச்.ஐ.வி வழக்குகள் பதிவாகியுள்ளன, 2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தம் 3,968 ஆண்களும் 1,379 பெண்களும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கடற்படை முற்றுகையை நீக்குவது உள்ளிட்ட வரைபு தயார் என்கிறது ஈரான்: மறுக்கிறது அமெரிக்கா!

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை நீக்குவது, ஹோர்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்தை மீட்டெடுப்பது...

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட புதிய எலி வகை

மாத்தளை மாவட்டத்தில் உள்ள தும்பர உலக பாரம்பரிய வனக் காப்பகத்தில் அமைந்துள்ள...

புங்குடுதீவில் கரையொதுங்கிய சடலம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 3ஆம் வட்டாரக் கடற்பகுதியில் சடலம் ஒன்று நேற்று (27)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்