மோட்டார்சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

Date:

மட்டக்களப்பு புதூரில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்னால் உள்ள வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதி வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு வாவியில் விழுந்து விபத்துக்குள்ளாகி நீரில் மூழ்கியதில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டு திருப்பெருந்துறை, 04வது குறுக்கு வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய கதிர்செல்வன் பரமநாதன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த விமானபடை முகாமிற்கு அருகில் திருப்பெருந்துறை செல்லும் வீதியில் சம்பவ தினமான நேற்று மாலை 4.30 மணியளவில் வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற நிலையில் வேக கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து மோட்டார் சைக்கிள் தடம்புரண்டு அருகிலுள்ள வாவிக்குள் வீழ்ந்ததையடுத்து இளைஞன் நீரில் மூழ்கினான்.

இதையடுத்து விமான படையினர் பொதுமக்கள் வாவியில் இருந்து இளைஞனை மீட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

-கனகராஜா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

உ.பி.யில் டேட்டிங் செயலி மூலம் ரூ.6 கோடி சுருட்டிய பெண்

உத்தர பிரதேச மாநிலம் பிர​யாக்​ராஜைச் சேர்ந்​தவர் பல்​லவி சிங் ராஜ்புத். இவர்...

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலிப் நாணயத்தாள்களை வைத்திருந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்