யாழில் போதை ஊசி ஏற்றிய இளைஞன் பலி

Date:

அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞன் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்திய பரிசோதனையில் இளைஞன் கிருமி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதும் , போதைக்கு அடிமையானவர் என்பதனையும் வைத்தியர்கள் கண்டறிந்தனர்.

இளைஞனுக்கான சிகிச்சையை வழங்கி வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

அதேவேளை இன்னுமொரு இளைஞனும் போதைக்கு அடிமையான நிலையில் , உடலில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_imgspot_img

More like this
Related

குற்றத்தை ஏற்றுக்கொண்ட ஜோன்ஸ்டன்

பதிவு செய்யப்படாத மற்றும் போலியான இலக்கத் தகடுகளைக் கொண்ட பிஎம்டபிள்யூ (BMW)...

வெளிநாடு செல்ல அனுமதி கோரும் கோட்டா

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட தேசிய இளைஞர் சேவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்