26 C
Jaffna
January 20, 2025
Pagetamil
இலங்கை

இலங்கையை உலுக்கிய அழகிய இளம் பெண்ணின் மரணம்: நாடகமாடிய கணவன் 5 மாதங்களின் பின் கைது!

அலவத்துகொட, எல்லக்கடே பகுதியில் 26 வயதுடைய அழகிய இளம் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அவரது கணவர் சுமார் 5 மாதங்களின் பின்னர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அலவத்துகொட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் சந்தேகநபரின் கணவரை நேற்று (22) கைது செய்துள்ளனர்.

இறந்த பெண்ணின் சடலம் கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி அவரது வீட்டின் அருகில் உள்ள வயலுக்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

தனுகா மதுவந்தி என்ற 26 வயதுடைய nபண்ணே இவ்வாறு கொல்லப்பட்டிருந்தார்.

கொலையை தொடர்ந்து, கண்டி பொலிஸ் உத்தியோகபூர்வ நாய்ப் பிரிவின் மோப்ப நாயான Ager ஐப் பயன்படுத்தி தேடுதல் நடத்தப்பட்டது. அந்த பகுதியிலிருந்த ஒற்றை செருப்பை நாய் மோப்பம் பிடித்ததும், வயல் வெளிக்குள்ளால் ஓடிச்சென்று வீடொன்றின் படுக்கையறைக்குள் நுழைந்ததாகவும், அங்கிருந்த முன்னா் இராணுவச்சிப்பாய் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிசார் அறிவித்திருந்தனர்.

கைதான அந்த முன்னாள் சிப்பாய் தற்போதும் விளக்கமறியலில் உள்ளார்.

கொல்லப்பட்ட பெண்ணுடன் கள்ளக்காதல் விருப்பத்தை அவர் தெரிவித்ததாகவும், பெண் மறுத்ததால் கொலை நடந்ததென்றும் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டது.

கொலையுண்ட பெண்ணுக்கு குறித்த நபர் தகாத ஆலோசனைகளை வழங்கியதாக கிடைத்த தகவலின் காரணமாகவே இது நடந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் ஆடைகள் களையப்பட்டிருந்தது. உடல் வயலுக்கு நடுவில் சதுப்பு நிலத்தில் புதைக்கப்பட்டிருந்தது. உடலை பார்க்கும் போது, அவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாகக்ப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று நினைக்கத் தோன்றும் விதமாக உடல் காணப்பட்டது.

இருப்பினும், டிஎன்ஏ மற்றும் தடயவியல் அறிக்கைகளின்படி, அவர் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று தெரியவந்துள்ளது என்று போலீசார் கூறுகின்றனர்.

இறந்த பெண்ணின் சடலத்திற்கு அருகில் சேற்றில் கிடந்த செருப்பு காணப்பட்டதுடன், அது குறித்த பெண்ணின் கணவருடையது என தெரியவந்துள்ளதுடன், அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நடந்த தொடர் விசாரணைகளை தொடர்ந்து, பெண்ணின் கணவரே கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் பொலிசாருக்கு ஏற்பட்டது.

இதன்படி பொலிஸார் அவரை கைது செய்ததுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கணவனும், மனைவியும் இணைந்து கடை நடத்தி வந்தனர்.

அன்று தாமதமாக அவர் வீடு திரும்பியபோது மனைவியை காணவில்லையென மனைவியின் தாயாருக்கு அறிவித்ததை தொடர்ந்து, நடத்தப்பட்ட தேடுதலில் மனைவியின் சடலம் மீட்கப்பட்டது.

சடலம் கண்டெடுக்கப்படுவதற்கு முந்தைய நாள் இரவு 9.50 மணியளவில் கடையை மூடிவிட்டு இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதாகக் கூறிவிட்டு கணவர் வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

நள்ளிரவு 2 மணியளவில் வீடு திரும்பியதாக போலீஸ் விசாரணையில் குறிப்பிட்டிருற்தார்.

அவர் கடையை பூட்டிய பின்னர்,  இருவரும் வசித்த வீட்டின் பக்கத்திலிருந்து அலறல் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் குடும்பத் தகராறு இருந்ததாகவும் பிரதேசவாசிகள் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காணாமல் போன இராணுவ துப்பாக்கிகள் பாதாள குழுக்களில்; 13 வீரர்கள் கைது

east tamil

அனுர அரசாங்கத்தின் ஒப்பந்தங்கள்: நாமல் ராஜபக்சவின் இருமுக பாராட்டுகள்

east tamil

கலாசார மையத்தின் பெயர் மாற்றம் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Pagetamil

ஜகத் விஷந்தவுக்கு பதவியுயர்வு

east tamil

மன்னாரில் இளம் பெண் சடலம் மீட்பு

east tamil

Leave a Comment