யாழில் இளம்பெண்ணின் அந்தரங்க புகைப்படம் பகிர்ந்த சர்ச்சை: மேலும் 24 பேர் கைது!

Date:

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, சிறுப்பிட்டியில் இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து இரண்டு இளைஞர்களை தாக்கி சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவத்துடன் மேலும் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் இது வரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில், கைதான 28 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், 9 பேரை எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டது.

அந்த பகுதியில் அண்மையில் திருமணமான இளம் பெண்ணொருவரின் முகம் பொருத்தப்பட்ட நிர்வாண படங்களை வட்ஸ்அப் ஊடாக பகிர்ந்தார்கள் என்ற சந்தேகத்தில் ஜுன் மாதம் 28 ஆம் திகதி இரவு அச்சுவேலி நீர்வேலி பகுதியிலுள்ள சிலர், குறித்த பகுதியில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து அங்கிருந்த இரு இளைஞர்களை தாக்கியதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸாரால், அமைதியின்மையை கட்டுப் படுத்த வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், மேலும் 24 சந்தேக நபர்கள் கைது செய்யபட்டனர்.

24 சந்தேக நபர்களையும் (04) இன்றைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தாக்கப்பட்ட இரண்டு இளைஞர்களும் விளக்கமறியலில் உள்ளனர்.

இதேவேளை, இளம்பெண்ணின் நிர்வாண படங்களை அனுப்பிய வட்ஸ்அப் இலக்கத்துக்குரிய உரிமையாளரை கண்டறிய மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப பரிசோதனையில், அந்த சிம் போலி அடையாளத்தில் வாங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழ் மாவட்ட ஊசி எம்.பி அர்ச்சுனாவின் படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது....

இளம்பெண்ணிடம் ஈவ்டீசிங்: தவெக ஒன்றிய செயலாளர் கைது​

திரு​வாரூர் புதிய பேருந்து நிலை​யத்​தில் இளம் பெண்​ணிடம் ஈவ்​டீசிங் செய்த தவெக...

எரிபொருள் இறக்குமதி செலவு குறைகிறது!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உச்சத்தை எட்டிய எரிபொருள் இறக்குமதி செலவுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்