இன்றைய வானிலை

Date:

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமேல் மாகாணத்திலும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும்.

ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஆசிய கடற்பரப்பில் 3 ஈரானிய கப்பல்களை இடைமறித்துள்ள அமெரிக்க கடற்படை

ஆசியக் கடற்பரப்பில் ஈரான் கொடியுடன் சென்ற குறைந்தது மூன்று எண்ணெய்க் கப்பல்களை...

காணாமல் போன 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் குறித்து நிதி அமைச்சகமும், மத்திய வங்கியும் ஏன் மௌனம் காக்கின்றன?: ஹர்ஷ கேள்வி

பொது நிதிக்கு அரசியலமைப்பு ரீதியாகப் பாராளுமன்றமே பொறுப்பு என்று கூறி, பொது...

அவுஸ்திரேலியாவிற்கு செலுத்த வேண்டிய கடன் இணையத்திருடர்களிடம் சென்ற விவகாரம்: நிதியமைச்சு விசாரணைக்குழு நியமித்தது!

அவுஸ்திரேலியக் கடனுக்கான தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்