சர்வதேச விசாரணை பொறிமுறை மூலமே தமிழர்களுக்கான தீர்வை பெற முடியுமென்பதை கைது நிரூபித்துள்ளது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

Date:

ஒரு சர்வதேச விசாரணை பொறிமுறை மூலம் தான் தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்பது இன்றைய எனது கைது எடுத்துக்காட்டுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்

மருதங.கேணி போலீசாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தெரிவித்து கொழும்பில் இன்று காலையில் கைது செய்யப்பட்டு மாலை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதை அடுத்து ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பனையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக வெளிநாட்டு பயண தடையும் நீக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து பிணையில் விடுதலையாகி வந்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தரப்பு பொலிஸ் என்பதால் அந்த தரப்பையும் விசாரிக்க வேண்டிய பொறுப்பு பொலிசாரிடம் இருப்பதனால் பொலிசார் விசாரணைகளை பக்க சார்பாக முன்னெடுத்து எங்கள் மீது ஒரு அடக்குமுறையை பிரயோகிக்கின்ற வகையிலேயே இந்த சம்பவம் கைது சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

இந்த சம்பவத்தை நாங்கள் மிகத் தெளிவாக நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தி இருக்கின்றோம்.

அந்த அடிப்படையிலே குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயரதிகாரிகள் மட்டத்திலே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் நீதிமன்றில் தெரிவித்திருக்கிறதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...

ராஜபக்சக்களின் வழியிலேயே அநுரவும்

ராஜபக்சாக்கள் தமிழர்கள் விடயத்தில் எதைச் செய்தார்களே அதையே அநுர அசாங்கமும் தமிழர்களுக்குச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்