தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று மாலை கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
கஜேந்திரகுமாரை 5 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பிலிருந்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டது. இதன்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் முன்பாக, கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





