மருதங்கேணி சம்பவத்துக்கு காரணமான 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டனர்!

Date:

மருதங்கேணியில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரை தாக்கி சர்ச்சைக்கு காரணமான இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்றையதினம் நான்கு மணி நேரமாக வாக்குமூலம் வழங்கினர்.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

மேலும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பரீட்சை கடமையில் ஈடுபட்டிருப்பதால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை – சீரற்ற காலநிலை காரணம்

நிலவும் கடும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து...

தையிட்டியில் ரூ.8.9 மில்லியன் விளையாட்டு திட்டம்

யாழ்ப்பாணம் - தையிட்டி ஸ்டார் விளையாட்டுக் கழக கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கலுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்