தியாகி பொன்.சிவகுமாரனின் நினைவு நிகழ்வு!

Date:

தியாகி பொன் சிவகுமாரனின் 49வது நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை(05) யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது சுடரேற்றி பொன் சிவகுமாரனது சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

அரசியல் வேறுபாடுகளின்றி பல்வேறு தரப்புகளாலும் முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வில் அரசியல் தலைவர்கள், சிவில் சமூக தலைவர்கள் பொதுமக்கள் என பல்வேறு தரப்புகளும் கலந்து கொண்டனர்.

பொன்.சிவகுமாரன் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி 1974 யூன் 5ம் திகதி மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழப்போரா்டத்தின் முதல்முதலாக நஞ்சருந்தி உயிர்நீத்தவர் இவராவார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கடன் திருட்டு விவகாரத்தில் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்ட திறைசேரி செயலாளர்

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் இணையவழித் திருட்டு...

அவுஸ்திரேலிய கடன் மோசடி: நீதிமன்றத்தில் சிஐடி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்!

திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5...

2025 வாகன இறக்குமதியில் 3வது பெரிய ஆண்டு!

வாகன இறக்குமதியைப் பொறுத்தவரை, 2025 ஆம் ஆண்டு நாட்டின் வரலாற்றில் மூன்றாவது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்