யாழில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவன் பலி

Date:

மின்சாரம் தாக்கி க.பொ.த. உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவன்  உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 1.15 மணியளவில் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் கண்ணதாசன் இராகுலன் (18) என்ற மாணவனே உயிரிழந்தார்.

வீட்டில் வளர்க்கப்படும் ஆடு குட்டி ஈன்றதனால் அதனை வேறு இடத்துக்கு மாற்ற முற்பட்ட போது பலா மரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்குமிழில் ஏற்பட்ட மின் ஒழுக்கு மாணவனை தாக்கியது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

மழை பெய்து கொண்டிருந்த வேளையில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்தார்.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் தன்னாமுனை யில் ஒரு வயது குழந்தை தண்ணீர் வாளியில் தவறி விழுந்து உயிரிழப்பு-

20 லீற்றர் கொண்ட தண்ணீர் வாளியில் விழுந்து ஒரு வயது ஆண்...

மீண்டும் தயாராகும் ஹிஸ்புல்லா

ஈரானிடமிருந்து பண உதவியைப் பெற்ற பிறகு, லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா,...

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்