கத்திக்குத்தில் ஒருவர் பலி!

Date:

நீராவிப்பிட்டி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளையில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீராவிப்பிட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் 16.04.2021 அன்று கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபர் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மீது குடும்பத்தகராறு காரணமாக கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

சம்பவத்தில் நீராவிப்பிட்டி பகுதியை சேர்ந்த 39 வயதுடைய முகமட் றஜாஜ் என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது உயிரிழந்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் சட்ட விரோத மதுபானம் போதைப்பொருள் விற்பனை ஒழித்து தருமாறு கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் (சுவிஸ் கிராமம்)  நீண்டகாலமாக  பொலிசாரின் ஆதரவுடன் சட்டவிரோத...

‘எமக்கு வேறு வழியே இல்லை’: ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்தது பற்றி இந்திய தூதர் விளக்கம்!

வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அந்நாட்டை விட்டு வெளியேறிய பிறகு,...

முஸ்லிம் காங்கிரஸின் சட்டத்தரணிகள் அமைப்பு உருவாக்கம் – ரவூப் ஹக்கீம் தலைமையில் முதலாவது கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட பிரிவாகக் கட்சியின் சட்டத்தரணிகள் அமைப்பு மிகக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்