ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது கட்டம் மே மாதம் 1வது வாரத்திலிருந்து செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
தொற்றுநோயியல் பிரிவின் தலைமை வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றவர்களிற்கு, இரண்டாவது டோஸ் செலுத்துவது பற்றி இன்று சுகாதார அமைச்சில் கலந்துரையாடல் நடந்தது.
தடுப்பூசி செயல்முறை மற்றும் தடுப்பூசி திகதிகள் நிபுணர் குழுவுடன் இன்று விவாதிக்கப்பட்டன.
தேசிய தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக 925,242 நபர்கள் இதுவரை இலங்கையில் கோவிஷீல்ட் தடுப்பூசியை பெற்றுள்ளனர்




