அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக வெற்றிபெற்றார்.
இந்நிலையில், துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ஃப்ளோரிடாவை சேர்ந்த நிவியன் பெடிட் பெல்ப்ஸ் என்ற செவிலியர் கொலை மிரட்டல் விடுத்ததாக அமெரிக்க சீக்ரட் சர்வீஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிப்ரவரி 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 18ஆம் தேதி வரை கமலா ஹாரிஸை கொலை செய்யவும், உடல் ரீதியாக தாக்கவும் நிவியன் பெடிட் பெல்ப்ஸ் மிரட்டல் விடுத்துள்ளதாக
ஃப்ளோரிடா நீதிமன்றத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1