உலகத் தமிழர் மாநாடு வியட்நாமில்!

Date:

பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் வியட்நாம் தமிழ் சங்கம் இணைந்து நடத்தும் உலகத் தமிழர் மாநாடு எதிர்வரும் பெப்ரவரி 21, 22ம் திகதிகளில் வியட்நாம் டனாங் நகரில் நடைபெறவுள்ளதாக பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவர் திருத்தணிகாசலம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இம்முறை தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வகையிலும் உலகத் தமிழர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இவர் தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழர்களின் சிறப்பு மிக்க ஒன்றுகூடலாக அமையவுள்ள இம் மாநாட்டில் சுமார் 40 நாடுகளில் இருந்து வரலாற்று ஆசிரியர்கள், தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், அரசியல் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் பெப்ரவரி 22ஆம் திகதி சனிக்கிழமை உலகத் தமிழர் வணிக மாநாடும் நடைபெறவுள்ளது.

மேலும், உலகத்தமிழர் மாநாடு தொடர்பாக இலங்கை வாழ் தமிழர்களை தெளிவூட்டும் ஊடகச்சந்திப்பு இன்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சர்ச்சை சம்பவம்!

கொபெய்கனே  பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,...

மேய்ச்சல் தரை விவகாரம்: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியமான மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளை சட்டவிரோத...

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்