தந்திரிமலை – ஓயாமடுவ வீதியில் தந்திரிமலை ரஜமஹா விகாரைக்கு அண்மித்த மானெல் குளப் பகுதியில் யாத்திரிகள் சென்ற மாட்டு வண்டியுடன் சொகுசு பேருந்து மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சிறு குழந்தை உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
22 வயதான இளைஞனே உயிரிழந்தார்.
மன்னாரிலிருந்து புத்தளம் நோக்கி இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பயணித்த தனியார் பேருந்து ஒன்று யாத்திரிகர்ள் சென்ற 5 மாட்டு வண்டிகளுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் நான்கு மாடுகளும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.





