ருவிற்றரின் லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்: நீல குருவிக்கு பதிலாக நாய் படம்

Date:

ருவிற்றர் சமூகவலைதள செயலியின் லோகோவை எலான் மஸ்க் மாற்றியுள்ளார்.

ருவிற்றர் என்றாலே நினைவுக்கு வருவது நீல நிறக் குருவிதான். ஆனால் அந்தக் குருவியின் படத்திற்குப் பதிலாக ஒரு நாயின் படத்தை லோகாவாக மாற்றியுள்ளார் எலான் மஸ்க். இருப்பினும் ருவிற்றர் மொபைல் வெர்சனில் இந்த மாற்றம் அமல்படுத்தப்படவில்லை.

கடந்த ஆண்டு ஒக்டோபரில் 44 பில்லியன் டொலருக்கு ருவிற்றர் தளத்தை வாங்கி இருந்தார் மஸ்க். அது முதல் பல்வேறு மாற்றங்களை அவர் மேற்கொண்டு வருகிறார். ப்ளூ டிக் கட்டண சந்தா முறை தொடங்கி பல மாற்றங்கள் இதில் அடங்கும். தளத்தில் தொழில்நுட்ப மாதிரியான அம்சங்கள் மட்டுமல்லாது நிர்வாக ரீதியாகவும் மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். ஆட்குறைப்பு நடவடிக்கையும் இதில் அடங்கும்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ருவிற்றர் செயலியின் லோகோவையே மாற்றி அதிரடி காட்டியுள்ளார் எலான் மஸ்க்.

ருவிற்றரின் லோகோவை ஏன் மாற்றினார் என்பதற்கும் எலான் மஸ்க் தனது ருவிற்றர் பக்கத்திலேயே விளக்கமளித்துள்ளார்.

முன்னர் ஒரு பயனர் தன்னிடம் ருவிற்றர் லோகோவை 2 ‘Doge’ படமாக மாற்றக் கூறியதால் தான் மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இந்த உரையாடல் நடந்துள்ளது. அப்போது அந்தப் பயனருக்கு எலான் மஸ்க், லோகோவை மாற்றுவதாக உறுதியளித்துள்ளார். அதன்படியே தற்போது நீல குருவிக்குப் பதிலாக Dogecoin லோகோவான நாய் படத்தை மாற்றியுள்ளதாகக் கூறியுள்ளார்.

எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கையால் ‘Dogecoin’ எனப்படும் க்ரிப்டோகரென்சி நிறுவனத்தின் பங்குகள் 20% உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நாய் ஜப்பான் நாட்டின் ஷிபு வகை நாயாகும். இது பிரபல Dogecoin கிரிப்டோகரன்ஸியின் லோகோவாகும். இந்த லோகோ அந்த நிறுவனத்தால் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பிட்கொயின் உள்ளிட்ட பிற கிரிப்டோகரன்ஸிகளைப் பகடி செய்வதற்காக இந்த லோகோ உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் எலான் மஸ்க் ருவிற்றரில் ஒரு மீமையும் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு காரில் ஷிபா வகை நாய் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துள்ளது. ஒரு பொலிஸ் அதிகாரி அதனிடம் லைசன்ஸை பரிசோதிக்கிறார். அதில் நீலக் குருவி படம் இருக்க நாய் அது பழைய படம் என்று விளக்குவது போல் உள்ளது.

அதிரடி நடவடிக்கைகள், சர்ச்சைகள் எனக் குறைவில்லாவிட்டாலும் கூட ருவிற்றர் சமூக வலைதளத்தில் அதிக பின்தொடர்பவர்களை பெற்ற நபராக இருக்கிறார் எலான் மஸ்க். இந்த தளத்தில் இதற்கு முன்னர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அதிக பின்தொடர்பவர்களை பெற்றிருந்தார். தற்போது அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார் மஸ்க். அதன் காரணமாக தற்போது சுமார் 13,36,43,335 (இந்த செய்தி பதியப்பட்ட நேரத்தில் இருந்தோர் எண்ணிக்கை) பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார் மஸ்க். கடந்த ஆண்டு ஜூன் மாதம்தான் 100 மில்லியன் பின்தொடர்பவர்களை மஸ்க் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்