மல்வத்தையில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைக்கூட்டத்தால் பரபரப்பு- தனிமைபடுத்தப்பட்ட ஒரு யானை

Date:

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை கிராமத்தினுள் திங்கட்கிழமை (03) மாலை புகுந்த காட்டு யானைக் கூட்டத்தினால் அப்பகுதியில் பதற்றமும் பரபரப்பு ஏற்பட்டது.

ஐந்துக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் மல்வத்தை கிராமத்திற்குள் புகுந்து அங்கிருந்த வயல் நிலங்களை அழித்து துவம்சம் செய்துவிட்டு சென்றுவிட்ட போதிலும் தனிமையான ஒருயானை வயல் வெளிகளூடாக பிரதான வீதியைக் கடந்து சென்றமையால் பிரதான வீதியில் வாகன சாரதிகளும் பொதுமக்களும் பாரிய பதற்றத்திற்குள்ளாகினர்.

தொடர்ச்சியாக தினமும் அப்பகுதிக்குள் நுழையும் காட்டு யானைக்கூட்டங்கள் வயல் நிலங்களையும், விவசாய காணிகளையும், பயிர் மற்றும் மரங்களையும் பாரியளவில் நாசமாக்கி வருகின்றன.

எல்லைப் புறங்களை மையமாக வைத்து யானைப்பாதுகாப்பு வேலி அமைத்துத் தரவேண்டும் என்பதுவே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகவுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...

தையிட்டி விகாரைக்குள் சிக்கிய காணி மீட்பு விவகாரம்: 21ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான...

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று நாம் தமிழர் கட்சியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்