அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பக்கவிளைவால் இலங்கையில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டன!

Date:

ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் பக்கவிளைவுகள் காரணமாக பல நபர்கள் இறந்த தகவல்கள் தன்னிடம் உள்ளதாக அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

பல நாடுகள் ஏற்கனவே தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தி வைத்துள்ளன என்பதை இலங்கை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய ரவி குமுதேஷ், ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்தியதன் காரணமாக இரத்த உறைவு பற்றிய அறிக்கைகள் குறித்து என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை சுகாதார அமைச்சகம் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

தடுப்பூசியின் பக்க விளைவுகள் குறித்து சுகாதார அமைச்சு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்றார்.

ஆரம்பத்தில் இருந்தே இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுவதற்கு வசதியாக தடுப்பூசிகளை நிர்வகிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டதாகவும், தடுப்பூசி கிடைப்பது தொடர்பாக எழுப்பப்பட்ட கவலைகளை சுகாதார அமைச்சு புறக்கணித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் இருந்து அதிக தடுப்பூசியைப் பெற இராஜதந்திர ரீதியாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் சங்கத்தின் தலைவர் கேள்வி எழுப்பினார்.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது!

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில்...

பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

பிரபஞ்சத்தில் நிகழும் தீவிரமான நிகழ்வுகளிலிருந்து உருவாகும் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோ...

சுரேஷ் சாலே மீண்டும் சிஐடியின் காவலில்!

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வு சேவையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்