மலேசியாவில் வணிகக் கப்பல்களில் மாலுமியாக வேலை வாங்கித் தருவதாகக் கூறி 8 இளைஞர்களை ஏமாற்றி ரூ.10 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
திருகோணமலை, அருணகிரி வீதியைச் சேர்ந்த கே.எஸ்.துஷாந்தன் (36) என்ற சந்தேகநபரே கைதாகினார்.
சந்தேகநபர் தலைமறைவாகி சிறிது காலம் தலைமறைவாக இருந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சந்தேக நபர் அத்திடிய, மந்திரிமுல்ல வீதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அந்த இடத்திற்குச் சென்று அவரைக் கைது செய்துள்ளனர்.
வணிகக் கப்பல்களில் மாலுமிகளாக வேலை வழங்குவதாக வாக்குறுதியளித்து பணம் பெற்றுக்கொள்ளும் இவர், பணம் செலுத்தியவர்களை மலேசியாவிற்கு அழைத்துச் சென்று அங்கு அழைத்துச் செல்லப்படும் நபர்களை வேறு வேலைகளுக்கு பயன்படுத்தி இந்த மோசடியில் ஈடுபடுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.




