கிளாலி பகுதியில் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாலி பகுதியில் உள்ள தாமரைக்குளத்தில் நேற்று பிற்பகல் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குளத்தில் நீராட சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கிளாலி பகுதியை சேர்ந்த 52 வயதுடைய மரியான் பீரிஸ் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1