தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியன இணைந்து தமிழ்முற்போக்குக் கூட்டணி அமைத்து அதனை ஐக்கிய மக்கள் சக்தி எனும் இலங்கையின் எதிர்கட்சியுடன் இணைத்து ஐக்கிய மக்கள் கூட்டணி
எனும் மெகா கூட்டணியில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டுக் கொண்டு,
போதாக்குறைக்கு மலையக அரசியல் அரங்க வேட்பாளர்களையும் அறையில் அழைத்து
பேரம் பேசி எடுக்கமுனைந்தால், அங்கே அரங்கத்தில் இணைவதற்காகக்
காத்திருக்கும் அத்தனை இளைஞர்களையும் பகிரங்கமாக மக்கள் அரங்கத்தில்
முன்னிறுத்துவேன். திலகருக்கு பணமுமில்லை, பயமுமில்லை என மலையக
அரசியல்அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினருமானமயில்வாகனம் திலகராஜா தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய முன்னணி யின் இளைஞரணி செயலாளர் சதீஷ் குமார் அதில்
இருந்து விலகி மலையக அரசியல்அரங்கத்துடன் இணைந்து கொண்ட ஊடகச் சந்திப்பு
ஹட்டனில் இடம்பெற்றது .
அதில் உரையாற்றும் போதேதிலகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
தொழிலாளர் தேசிய சங்கத்தையோ முன்னணியையோ உடைக்கும் நோக்கம் என்னுடையது அல்ல. அதனை மீளஉருவாக்கியவன் என்பதையும் அதற்கு திகாம்பரத்தைத்
தலைவராக்கியதும் நான் என்பதை அங்கு உள்ள மூத்த உறுப்பினர்கள் நன்கு
அறிவார்கள்.
நுவரெலியா மாவட்டத்தில் சிறந்த எம்பியாக கடந்த பாராளுமன்றில் விருது
வாங்கியே என்னுடைய பதவிகாலத்தை பாராளுமன்றத்தில் நிறைவு செய்தாலும்,
என்னிடத்தில் பணம் இல்லை என காரணம் காட்டி தேர்தலில் போட்டயிட வாய்ப்பு
வழங்கவில்லை. தேசிய பட்டியல் என அவர்கள் போட்ட நாடகமும் அரங்கேறவி்லை.
ஆனால் அதனைச் சொல்லி நான் இல்லாத இடங்கெளிலெல்லாம் அவர்களுக்கு வாக்கு
சேகரித்துக் கொண்டார்கள். அப்போதும் கூட நான் அதே அணியில் இரத்தினபுரியில் என் போன்ற தம்பி சந்திரகுமாருக்கு வாக்கு சேகரித்து கொடுத்தேன். அதற்கு பிறகும் எதிர் கட்சியில் ஓடி ஒட்டிக் கொள்ளவில்லை. தொழிலாளர் தேசிய சங்கத்தையோஅல்லது முன்னணியையோ அங்கிருந்து கொண்டு தூற்றவில்லை. புதிய அமைப்பை உருவாக்கும்போதும்அங்கிருந்து ஆள்பிடிக்கவில்லை.
இத்தனை நாகரீகத்தைக் கடைபிடித்து புதியவர்களைக் கொண்டு மலையக அரசியல்
அரங்கத்தினை ஆரம்பித்து இன்று அரசியல் களம் காணும்போது எமது அணியினரை
அழைத்து அறையில் அமர்ந்து கொண்டு குதிரை பேரம்பேசி ஆள்பிடிக்கும்
திகாம்பரம் உதயகுமார் ஆகிய இருவருக்கும் பாடம் பிடிப்பக்கவே இன்று
எனது ஆதரவாளர்களாக அங்கே இருப்பவர்களை அரங்கத்தில் பகிரங்கமாக அரங்கேற்றி
காட்டுகிறேன்.
இவர்களைப் பணம் கொடுத்து வாங்கவில்லை. அவர்கள் கூறுவது போல என்னிடம்
பணமில்லைதான். ஆனால் திலகரிடம் பணமுமில்லை பயமுமி்ல்லை என அவர்களுக்கு
சொல்லி வைக்க விரும்புகிறேன்.
சதீஷை நான் சந்தித்து ஒரு தேசிய மாநாட்டில் அவரது திறமை அறிந்து கடந்த
உள்ளூராட்சி தேர்தலில்போட்டியிடும் வாய்ப்பினை வழங்கினேன் . அவர்
தெரிவாகாத நிலையில் எனது பாராளுமன்ற செயலாளர் பதவியைஉத்தியோகபூர்வமாக
வழங்கி அரசியல் பாதையில் தொடர்ந்து பயணிக்க வழிகாட்டினேன்.
ஆனால் இந்த முறை இவர் போன்ற இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களாக அனுபவம்
பெற்ற இளைஞர்களுக்கே அங்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற ஆதங்கத்தோடு
அரங்கத்துடன் இணைந்து வருகிறார்கள். இன்னும் வர இருக்கிறார்கள். அவர்கள்
அனைவரையும் இணைத்துக் கொள்ள என்னால் முடியும். ஆனால் தொழிலாளர்
தேசிய சங்கமும் முன்னணியும் எனது இரண்டு கண்கள் போன்றன. அந்த கண்களில்
குத்த நான் விரும்பவில்லை. ஆள்பிடிக்கும் வேலையை ஆரம்பித்து வைத்த திகா,
உதயாவுக்கு பதிலடியே இது எனவும் தெரிவித்தார்.
அரங்கத்தில் இணைந்து கொண்ட சதீஷ் குமாருக்கு அரங்கத்தின் அம்பகமுவை
பிரதேச அமைப்பாளர் பதவியும் இளைஞரணியின் உயர் பதவியும் வழங்கப்பட
உள்ளதாகவும் அரங்கத்தின் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
-பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்-