Pagetamil
குற்றம்

பேஸ்புக் களியாட்டத்தில் ஈடுபட்ட 32 பேர் கைது!

பியகம பிரதேசத்தில் இடம்பெற்ற பேஸ்புக் களியாட்டத்தில் கலந்து கொண்ட 32 பேர் போதைப்பொருள் உள்ளிட்டவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரகசிய தகவலின் அடிப்படையில் பியகமவில் உள்ள ஹோட்டல் ஒன்றில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கஞ்சாவுடன் 7 பேர், போதை மாத்திரைகளுடன் 4 பேர், ஐஸ் உடன் ஒரு நபர், வரி செலுத்தாமல் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 6 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மருதானை, கிராண்ட்பாஸ், மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டிய, பேலியகொட மற்றும் களனி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் 20 மற்றும் 27 வயதுடையவர்கள். இவர்களில் யுவதியொருவரும் உள்ளடங்குகிறார்.

அவர்கள் இன்று மஹர நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

பியகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கையை உலுக்கிய கொள்ளைக்கும்பல் கைது: 36 வயது தலைவி… 22 வயது கணவன்!

Pagetamil

கடன் தொல்லையால் இளம் தம்பதி விபரீத முடிவு: காட்டுக்குள் அருகருகாக சடலங்களாக மீட்பு!

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியைக்கு விளக்கமறியல்!

Pagetamil

வெளிநாடு சென்ற காதலன் தொடர்பு கொள்ளாததால் இளம்பெண் விபரீத முடிவு

Pagetamil

வவுனியா சிறைச்சாலை கூடா நட்பு: கணவனின் நண்பனுடன் பியர் குடித்த பின் நடந்த கொடூரம்!

Pagetamil

Leave a Comment