கிளிநொச்சி, அக்கராயன் மேற்கில் மதுபான விற்பனை நிலையத்துடன் கூடிய ஹொட்டல் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதேசவாசியொருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அக்கராயன் மேற்கு பிரதேசத்தில் உணவு, மதுபான விற்பனை வசதிகளை கொண்ட ஹொட்டல் திறப்பதற்கு அந்த பகுதி பொதுஅமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கிளிநொச்சி மாவட்ட செயலாளர், கரைச்சி பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் எழுத்து மூலமாக தமது எதிர்ப்பை கையளித்துள்ளனர்.
கடந்த 29ஆம் திகதி ஆரோக்கியபுரம் கிராமத்தில் ஒன்றுகூடிய பொதுஅமைப்புக்கள், அந்த ஹொட்டலை திறக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர்.
இந்த நிலையில், பிரதேசவாசியான முருகையா இராசலிங்கம் என்பவர் நேற்று (31) மதியம் 12 மணியளவில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தார்.
மக்கள் செறிந்து வாழும் தமது பகுதியில் மதுபான விற்பனை நிலையம் வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.