திருமண வீட்டில் பட்டாசு கொளுத்தியது ஒரு குற்றமா?: இரு வீட்டாரும் கும்பலாக மோதல்!(video)

Date:

திருமண வீட்டில் பட்டாசு வெடித்தது சர்ச்சையாகி, மணமகன் வீட்டாரும், மணமகள் வீட்டாரும் பயங்கரமாக மோதிக் கொண் வீடியோ வைரலாகி வருகிறது.

கேரளாவின், கோழிக்கோடு மேப்பயூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

திருமண விழாவிற்கு மணமகள் வீட்டிற்கு வந்த மணமகன் வீட்டார் பட்டாசு வெடித்தனர். இது குறித்து மணமகள் வீட்டார் கேள்வி எழுப்பியதால் தகராறு ஏற்பட்டது.

இரு பிரிவினருக்கும் இடையே முதலில் ஏற்பட்ட தகராறு, உறவினர்கள் தலையீட்டில் முடிவுக்கு வந்தது.

ஆனால் மீண்டும் தகராறு ஏற்ப்டு, மோதலாகியது. மணமகள் தரப்பைச் சேர்ந்த சில இளைஞர்கள் முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், இரு தரப்பும் மோதலில் இறங்கியது.

திருமண நிகழ்விற்கு சென்ற ஒருவர் அதை வீடியோ எடுத்து வெளியிட, அது வைரலாகியுள்ளது.

இரு வீட்டாரும் மோதலில் ஈடுபட்டாலும், மணமக்கள் காரியத்தில் கண்ணாயிருந்துள்ளனர். அனைத்து திருமண சடங்குகளும் முறையாக நடத்தப்பட்டு, தம்பதியினர், மகிழ்ச்சியாக அனைவரையும் அனுப்பி வைத்தனர்.

மோதலில் ஈடுபட்டவர்கள் களையாற, விருந்துண்டு விட்டு வீடு திரும்பியுள்ளனர்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து யாரும் போலீசில் புகார் செய்யவில்லை.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் நாசமாகிறது: ட்ரம்பை மறைமுகமாக சாடிய போப்!

போர்களுக்காக பில்லியன் கணக்கில் செலவழிக்கும் தலைவர்களை போப் கடுமையாகச் சாடியதோடு, "ஒரு...

விவசாயி சின்னத்தை நாதக பயன்படுத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி

ஜனதா கட்சியின் ‘ஏர் உழவன்’ சின்னத்தைப் போல இருக்கும் விவசாயி சின்னத்தை...

ஆயுதங்களுடன் சிக்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி வசம் ஆயுதங்கள் இருப்பதாக கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்