தகாத உறவால் விபரீதம்: கள்ளக்காதலி முன்பாக இளைஞன் வெட்டிக்கொலை!

Date:

சென்னையில் திருமணத்தை மீறிய உறவால் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் லட்சுமிபுரம் அசோகர் தெருவைச் சேர்ந்தவர் சுதாசந்தர்(22). இவர் கண்ணாடிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு சுதா சந்தர் இருசக்கர வாகனத்தில் ஒரு இளம்பெண்ணுடன் ரெட்டைஏரி கல்பாளையம் அருகே வந்துள்ளார். அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், சுதாசந்தரை வழிமறித்து அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்றது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெண், உடனே புழல் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், உயிரிழந்த சுதாசந்தர் உடலைக் கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை குறித்து வழக்குப் பதிவு சுதாசந்தருடன் வந்த ராகினி என்ற பெண்ணைப் பிடித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், தகாத உறவால் நடந்த கொலை எனத் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,” சுதாசந்தர் ஆவடியில் வசிந்து வந்த போது ராகினி(25) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அது தகாத உறவாக மாறியுள்ளது. ராகினிக்கு ஏற்கெனவே திருமணமாகி வசந்த்(29) என்ற கணவரும், ஓன்றரை வயதில் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ராகினியின் தகாத உறவு அவரது கணவர் வசந்த், அவரது அண்ணன்களான உதயா(28), பரத் என்ற ராபின்(25) ஆகியோருக்குத் தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் ராகினி மற்றும் சுதாசந்தரைக் கண்டித்துள்ளனர்.

இதன் காரணமாக கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மூன்று மாதங்களாக கணவரை பிரிந்து அண்ணன் வீட்டில் ராகினி வசித்து வந்துள்ளார். இதற்கிடையே ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி சுதாசந்தருடன் ரெட்டை ஏரி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து ராகினி ஒன்றாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில்,சுதா சந்தரை கொலை செய்ய ராகினியின் கணவர் மற்றும் அவரது அண்ணன்கள் முடிவு செய்தனர். நேற்று இரவு ராகினியுடன் வந்த சுதாசந்தரை அந்த கும்பல் கள்ளிப்பாளையம் அருகே கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொலையாளிகள் வந்த ஆட்டோ எண்ணை வைத்து ஒரகடம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் கார்த்திக்(28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் தலைமறைவாகியுள்ள ராகினியின் கணவர் வசந்த், அண்ணன்கள் உதயா, பரத் ஆகிய மூன்று பேரைத் தேடிவருகிறோம்” என்றனர். தகாத உறவால் பெண் முன்பு வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்