பாலியல் தொழிலில் ஈடுபட்ட இலங்கை யுவதி உள்ளிட்ட சில பெண்கள் கைதானதை தொடர்ந்து, அதிமுக மகளிரணி நிர்வாகி, கணவர் உள்ளிட்ட 3 பேர் கைதாகியுள்ளனர்.
விருதுநகர், கொல்லர் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 42). இவரின் மனைவி அமல்ராணி, விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க மகளிரணி துணைத் தலைவியாக இருக்கிறார். இந்தத் தம்பதி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக விருதுநகர் பேராலி ரோடு ஐ.டி.பி.டி காலனியில் புதிதாக வாடகை வீட்டில் குடியேறினர்.
இந்த நிலையில், அந்த வீட்டுக்கு அடிக்கடி ஆண்கள் வந்து சென்றது அக்கம், பக்கத்தினருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து, சந்திரசேகரன் வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்பேரில் அங்கு சென்ற போலீஸார், வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் வீட்டில் ஓர் அறையில் ஆணும், பெண்ணும் தனிமையில் இருப்பதை அறிந்த போலீஸார், அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், அவர்கள் சிவகாசியைச் சேர்ந்த ஹரிபாலகுமார் (24), சாத்தூரில் தங்கியுள்ள இலங்கை இளம்பெண் என்பது தெரியவந்தது. இவர்கள், இருவரும் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் வீட்டில் பாலியல் தொழில் நடப்பது உறுதியானது.
இது தொடர்பாக, சந்திரசேகரன், அவர் மனைவி அமல்ராணியிடம் விசாரணை நடத்தியதில், இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்தது தெரியவந்தது.
போலீசாரிடம் சிக்கிய இளம் பெண், இலங்கையிலிருந்து திரைப்பட வாய்ப்பு தேடி சில வருடங்களின் முன்னர் இந்தியா வந்த அந்த யுவதி, வாய்ப்பு கிடைக்காதால் பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
எனவே, சந்திரசேகரன், அமல்ராணி, ஹரிபாலகுமார் ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.



