அவுஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றார் நோவக் ஜோகோவிச்!

Date:

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்கள் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பட்டம் வென்றார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் உள்ள ராட் லேவர் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை நேர் செட்களில் (6-3, 7-6, 7-6) தோற்கடித்தார்.

ஜோகோவிச்சிற்கு இது பத்தாவது அவுஸ்திரேலிய ஓபன் பட்டம். ஒட்டுமொத்தமாக அவரது 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டம்.

24 வயது ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை சுதாகரிக்க அவகாசம் வழங்காமல் ஜோகோவிச் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம், ஜோகோவிச் அவுஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிகளில் தோல்வியடையாத வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டார்.

இந்த வெற்றி நோவாக்கை தரப்படுத்தலில் நம்பர் வன் வீரராக மாற்றியது. அத்துடன், அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரஃபேல் நடாலின் 22 கிண்ண சாதனையை சமன் செய்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...

திறைசேரி அதிகாரி தற்கொலை செய்து கொண்டது உறுதி!

நிதி அமைச்சகத்தின் இடைநீக்கம் செய்யப்பட்ட உதவிப் பணிப்பாளர் ஒருவரின் சந்தேகத்திற்கிடமான மரணம்,...

வெயின் உச்சம் ஆபத்தான நிலைமைகளில் மாடுகள்

தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைபிரதேசங்களில் மாடுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்