Pagetamil
இலங்கை

பொலிஸ் உத்தியோகத்தரும் நண்பரும் வெட்டிக்கொலை!

பொலிஸ் விசேட அதிரடிப்படையில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் அவரது நண்பரும் நேற்றிரவு இருவரால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாக கிரியுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த நாற்பத்தொரு வயதுடைய இஷார மகேஷ் பண்டார என்ற பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் அவரது நண்பரான 38 வயதுடைய கசுன் புஷ்பகுமார ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குருநாகல் ரத்கல்லையில் உள்ள விசேட அதிரடிப்படை முகாமில் பொலிஸ் சார்ஜன்ட் பணிபுரிவதாக கிரியுல்ல பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இருவரையும் வாள்களால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலைமறைவான இரு சந்தேக நபர்களை கைது செய்ய கிரியுல்ல பொலிஸ் அதிகாரிகள் குழு விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அடுத்த 24 மணி நேரத்துக்கு தொடரும் சீரற்ற வானிலை

east tamil

விசாரணை அறிக்கைகள் மாயம் – நளிந்த ஜயதிஸ்ஸ

east tamil

கிராமிய திட்டங்களுக்கு 1400 பில்லியன் மூலதன ஒதுக்கீடு – ஜனாதிபதி

east tamil

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும் – ஜோன் ஜிப்ரிகோ

east tamil

பிறைக்குழு மாநாடு இன்று!

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!