26 C
Jaffna
January 28, 2025
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

‘சமையலறைக்குள் என்னை அடித்து கீழே தள்ளினார் வில்லியம்’: ஹாரி பகிர்ந்த அதிர்ச்சித் தகவல்கள்

தனது சகோதரர் வில்லியம் தன்னை அடித்து கீழே தள்ளி காயம் ஏற்படுத்தியதாக இளவரசர் ஹாரி அதிர்ச்சித் தகவல்களைப் பதிவு செய்துள்ளார்.

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் சுயசரிதை புத்தகமான ‘ஸ்பேர்’ (Spare) இம்மாதம் 10ஆம் திகதி வெளியாக இருக்கிறது. அதில், தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவங்கள் பலவற்றை பதிவிட்டுள்ளார். குறிப்பாக, மேகன் மார்கல் உடனான தனது காதலுக்கு இளவரசர் வில்லியம் எவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறித்தும், அவர் தன்னை தாக்கியது குறித்தும் ஹாரி அதில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் சிலவற்றை த கார்டியன் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் உலகின் மிகப் பிரபலமான அரச குடும்பத்தில் நிகழ்ந்த மோசமான சம்பவங்கள் வெளியாகி உள்ளன.

2019இல் இந்த சம்பவம் நடந்தது.

”மேகன் மார்கலை நான் திருமணம் செய்து கொள்வதை வில்லியம் விரும்பவில்லை. கடினமானவர், முரட்டுத்தனமானவர், பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவர் என்றெல்லாம் மேகன் மார்க்லை வில்லியம் அழைத்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில் நான் அவரை விட்டு விலகி சமையலறைக்கு சென்றேன். என் பின்னாலேயே வந்தார்.

வில்லியமுக்கு ஒரு கிளாஸ் தண்ணீரைக் கொடுத்து “வில்லி, நீ இப்படி இருக்கும்போது என்னால் உன்னிடம் பேச முடியாது” என்றேன்.

“அவர் தண்ணீரை கீழே வைத்தார், எனக்கு வேறு பெயரைக் கூறினார், பின்னர் என்னிடம் வந்தார். அவர் எனது சட்டை கொலரை பிடித்து இழுத்தார். நான் கழுத்தில் அணிந்திருந்த செயினை அறுத்தார். அப்படியே கீழே தள்ளினார். நாய்க்கு உணவு வைக்கும் பாத்திரத்தின் மீது போய் நான் விழுந்தேன்.

அந்தப் பாத்திரம் எனது முதுகில் கீறி விட்டது. சிறிது நேரம் நான் அப்படியே படுத்துக் கிடந்தேன். அதன்பிறகு எழுந்து, அவரை வெளியே போகச் சொன்னேன். இவை எல்லாமே மிக வேகமாக நடந்து முடிந்தன. இந்தச் சம்பவத்தால் எனக்கு முதுகில் ஏற்பட்ட காயங்கள் குறித்து நான், என் மனைவி மேகன் மார்க்லிடம் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர் இதை கவனித்துவிட்டு மிகவும் வேதனைப்பட்டார்” என்று ஹாரி தெரிவித்துள்ளார்.

தன்னை தாக்கிய பின்னர் வில்லியம் தன்னை அடிக்கும்படி வற்புறுத்தியதாக ஹாரி கூறுகிறார்.

ஆனால் ஹாரி அதனை மறுத்துவிட்டார் என்று கூறுகிறார், வில்லியம் வெளியேறியதாகவும், பின்னர் திரும்பி வந்து ‘வருந்துவதாகவும், மன்னிப்புக் கேட்டதாகவும்’ கூறினார்.

வில்லியம் பின்னர் ‘திரும்பி வந்து: ‘நீங்கள் இதைப் பற்றி மேகனிடம் சொல்லத் தேவையில்லை’ என்றார்.

‘நீங்கள் என்னைத் தாக்கினீர்கள் என்று சொல்ல வேண்டாமா?’ என ஹாரி கேட்க, அதற்கு வில்லியம்  ‘நான் உன்னைத் தாக்கவில்லை, ஹரோல்ட்’ என்றார்.

இளவரசர்கள் ஹாரி மற்றும் வில்லியம் ஒருவரையொருவர் ‘வில்லி’ மற்றும் ‘ஹரோல்ட்’ என்று குறிப்பிடுகின்றனர்.

இளவரசர் பிலிப் இறந்ததைத் தொடர்ந்து நடந்த சந்திப்பில் தனது ‘இறுதி ஆண்டுகளை ஒரு துன்பமாக’ ஆக்க வேண்டாம் என்று மன்னர் சார்லஸ் தனது முரண்படும் மகன்களான வில்லியம் மற்றும் ஹாரியிடம் கெஞ்சினார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதுதவிர, ஒரு ஆடம்பரமான ஆடை விருந்துக்கு நாஜி சீருடையை அணியுமாறு வில்லியமும் கேட்டும் தன்னிடம் கூறியதாக ஹாரி குறிப்பிட்டுள்ளார்.

மேகன் மார்கல் உடனான திருமணத்தை அடுத்து கடந்த 2020இல் அரச குடும்பத்து பொறுப்புகளில் இருந்து விலகிய ஹாரி, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் குடிபெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நைஜீரியாவில் பெற்றோல் தீப்பற்றி வெடித்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு

east tamil

சூடானில் மருத்துவமனை மீது டிரோன் தாக்குதல் : 70 பேர் பலி

east tamil

தமிழ் அரசு கட்சிக்காக தமிழ் கட்சிகளின் சந்திப்பு மீளவும் ஒத்திவைப்பு!

Pagetamil

யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

Pagetamil

சீனாவில் செயற்கை சூரியன் பரிசோதனை வெற்றி

east tamil

Leave a Comment