காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடனான காணொலிக் கூட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த வாரம் நடத்தினார். அதைத் தொடர்ந்து தற்போது பிரதமர் மோடிக்கு அது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அதில் அவர், “உள்நாட்டில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் அதே நேரத்த்தில், மேலும் பல தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிப்பது பயனுள்ளதாக இருக்கும். மேலும், தடுப்பூசி போடுவதற்கான தகுதியையும் வயது மட்டுமன்றி, தேவை, பாதிப்பு நேரிடக்கூடிய அபாயத்தை அடிப்படையாகக்கொண்டு விரிவுபடுத்த வேண்டும்” எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார்.




