26.5 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

வடமாகாண தனியார்துறை ஊழியர்களிற்கு மகிழ்ச்சியான செய்தி: அடுத்த ஆண்டு முதல் ETF கட்டாயம்!

வடமாகாணத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் வருகின்ற புதிய ஆண்டில் இருந்து ஊழியர் நாளேடு பயன்படுத்தப்பட வேண்டும் இல்லாது போனால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண தனியார் ஊழியர் சங்கத்தின் தலைவர் சாமிநாதன் சிவகுமார் அறிவித்துள்ளார்.

இன்று (30) யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

தனியார் நிறுவனங்களில் 80 வீதமான ஊழியர்கள் தமது வரவை நிறுவனங்களில் பதிவு செய்வதில்லை. எனவே வருகின்ற புதிய ஆண்டில் இருந்து அவர்களுக்கான நாளேடு காட்சிப்படுத்துவதுடன் ETF, EPF இலக்கமும் நாளேட்டில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
இல்லாது தனியார் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம்.

பெரிய தனியார் நிறுவனங்களில் இந்த நடைமுறை இருக்கிறது. சிறிய நிறுவனங்கள், புடவை கடைகள், உணவகங்களில் தான் இந்த நடைமுறை இருப்பதில்லை.

எனவே ஊழியர்கள் வேலைக்கு வந்து செல்லும் நேரம் நாளேட்டில் பதிவு செய்து காட்சிப்படுத்தப்பட வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்று முதல் உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு

east tamil

இலங்கையில் விரைவில் சூரிய மின்னுற்பத்தி

east tamil

கம்மன்பிலவின் கவலைகளின் பின்னணி என்ன?

Pagetamil

மத்தள விமான நிலையத்தால் தொடரும் நட்டம்

east tamil

உள்ளுராட்சி தேர்தல் விதிகளில் தாமதம்

east tamil

Leave a Comment