மோட்டார் சைக்கிளில் கட்டியணைத்தபடி பயணித்த காதல் ஜோடி கைது!

Date:

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில், மோட்டார் சைக்கிளில் கட்டிப்பிடித்தபடி பயணித்த  காதல் ஜோடியின் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அந்த ஜோடி கைது செய்யப்பட்டதாக வியாழக்கிழமை பொலிசார் தெரிவித்தனர்.

இந்த வீடியோ விசாகப்பட்டினத்தின் எஃகு ஆலை சாலையில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, இது காருக்குள் அமர்ந்திருந்த வேறு சிலரால் படமாக்கப்பட்டது.

அந்த பெண் கே ஷைலஜா (19), ஆண் அஜய்குமார் (22) என அடையாளம் காணப்பட்டது.

இந்த விவகாரம் விசாகப்பட்டினம் போலீஸாரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த ஜோடி கைது செய்யப்பட்டனர்.

இருவர் மீதும் அலட்சியமாக வாகனம் ஓட்டிய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, வாகனத்தை இரும்பு ஆலை போலீஸார் பறிமுதல் செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

போலீசார் மோட்டார் வாகன சட்டம் 336, 279, 132 மற்றும் 129 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இருவரது பெற்றோரும் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

போக்குவரத்து விதிகளை குடிமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடைபிடிப்பது மிகவும் அவசியம் என மாநகர காவல் ஆணையர் சி.எச்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிகளை மீறுவோரின் வாகனங்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

வடக்கு, கிழக்கில் மழைக்கு வாய்ப்பு

எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் இடியுடன் கூடிய...

கிழட்டுச்சிங்கம் வருமாம்: ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் போடும் ‘சீன்’!

அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பேரணியில் முன்னாள் ஜனாதிபதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்